[X] Close

உ.பி. முதல்வருக்கு எதிராக அவதூறு செய்தி: தொலைக்காட்சி சேனலின் ஆசிரியர் கைது


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:51 am
  • அ+ அ-

டெல்லி அருகேயுள்ள நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் தொலைக்காட்சி சேனலில் கடந்த 6-ம் தேதி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒரு பெண், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக தொலைக்காட்சி சேனலின் ஆசிரியர், தலைமை நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் எஸ்.பி. வைபவ் கிருஷ்ணா கூறியபோது, "செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஒளிபரப்பி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியதற்காக இருவரையும் கைது செய்துள்ளோம்" என்றார். முதல்வருக்கு எதிராகப் பேசிய பெண்ணின் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close