[X] Close

காணாமல் போன போர் விமானம் குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் வெகுமதி


5

  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:53 am
  • அ+ அ-

அசாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப் படை தளத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெச்சுகா நகருக்கு செல்வதற்காக இந்திய விமானப் படையின் ஏ.என்.-32 ரக விமானம், கடந்த 3-ம் தேதி மதியம் 12.35-க்கு புறப்பட்டது.

அந்த விமானத்தில் விமானப் படை ஊழியர்கள், ராணுவ வீரர்கள் என மொத்தம் 13 பேர் இருந்தனர். இதனிடையே, புறப்பட்டு 2 மணி நேரத்துக்கு மேலாகியும் மெச்சுகா படைத் தளத்துக்கு அந்த விமானம் சென்றடையவில்லை. மேலும், அந்த விமானத்தை தொடர்பு கொள்ளவும் முடியாமல் போனது.

இதனால் அந்த விமானம் காணாமல் போனதாக அறிவித்த இந்திய விமானப் படை, அதனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. பல்வேறு நவீன விமானங்கள் மூலமாக கடந்த ஒரு வாரமாக தேடியும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும், அருணாச்சல பிரதேசத்தில் மோசமான வானிலை நிலவுவதால் விமானத்தை தேடும் பணியில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காணாமல் போன ஏ.என்.-32 விமானம் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என இந்திய விமானப் படை அறிவித்துள்ளது. - பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close