[X] Close

அமர்நாத் யாத்திரை பாதைகளில் ஆளுநர் ஆய்வு


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:54 am
  • அ+ அ-

காஷ்மீர் மாநிலம், இமயமலையில் அமர்நாத் குகை கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் புனித யாத்திரை வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெற உள்ளது. காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று அமர்நாத் யாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்.

அமர்நாத் கோயிலுக்கு செல்லும் பல்தால், சந்தன்வாரி பாதைகளை முழுமையாக அவர் பார்வையிட்டார். மலைப் பாதைகள் சீரமைப்பு, பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் குறித்து ஆளுநர் திருப்தி தெரிவித்தார்.

வரும் ஜூலை 1-ம் தேதிக்கு முன்பாக யாத்திரைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மூத்த அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.

பக்தர்களின் வசதிக்காக அடிவார முகாம், உதவி மையங்கள், சமையல் கூடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close