[X] Close

பாஜகவுக்கு புதிய தலைவர்? - புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தீவிரம்


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 15:32 pm
  • அ+ அ-

பாஜக கட்சி அமைப்பு தேர்தலை நடத்துவது குறித்து அக்கட்சி தலைமை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளளது.

பாஜக தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிந்து விட்டது. மக்களவைத் தேர்தல் நடந்ததால் பாஜக அமைப்பு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பாஜக தயாராகி வருகிறது.

இதற்காக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை பாஜக தலைவர் அமித்ஷா 13 மற்றும் 14ம் தேதிகளில் சந்தித்து பேசுகிறார். இதில் பங்கேற்குமாறு மாநில பாஜக பொதுச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி வாரியாக நிர்வாகிகளை தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. கீழ்மட்டத்தில் இருந்து மாநில அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு, கட்சியின் தேசிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பாஜக தலைவர் அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் கட்சி விதிகளின்படி வேறு ஒருவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. முன்னள் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தேர்வு செய்யப்பட வாய்ப்ப இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close