[X] Close

மேற்குவங்கத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் பயங்கர மோதல்: 8 பேர் பலி?- அறிக்கை கேட்கிறது மத்திய அரசு


8

  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 15:17 pm
  • அ+ அ-

மேற்கு வங்கத்தில் நேற்று முதல் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலில் இதுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது கலவரம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் திரிணமூல் கட்சிக்கு 39 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் திரிணமூல் கட்சியின் வாக்குச் சதவீதம் 43 சதவீதமாக அதிகரித்தாலும், வெற்றி பெற்ற இடங்கள் 34-ல் இருந்து 22 ஆக குறைந்துவிட்டது.

பிரதமர் மோடியின் திட்டமிட்ட பிரச்சாரங்கள், அமித் ஷாவின் திட்டங்கள் எல்லாம் பாஜக.வுக்கு ஆதரவாக மாறின. அதற்கு பலனாக கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. அத்துடன் மேற்குவங்கத்தில் கடந்த தேர்தலில் வெறும் 17 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 40.5 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டது.

இதனால் இருகட்சி தொண்டர்களிடையே அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. 24 பர்கானா மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பாஜக கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது.

bjp.JPG 

இந்த மோதலில் பாஜக தொண்டர்கள் 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்தார். மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்கள் கட்சி தொண்டர்கள் 3 பேரை பாஜகவினர் கத்தியால் குத்திக் கொன்றதாக மாநில அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்துள்ளார். இருதரப்பிலும் 8 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு வன்முறை பரவாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மேற்குவங்க வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close