[X] Close

வண்ணங்களால் மிளிரும் மும்பை சேரி


a-colourful-makeover-for-mumbai-slum

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Jun, 2018 11:55 am
  • அ+ அ-

மும்பையின் அஸல்ஃபா சேரி அண்மையில் செய்திகளில் அடிபட்டது. காரணம், அதன் புதிய தோற்றம். சல் ரங் தே என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மும்பை நகரின் சேரிகளை அழகுபடுத்தும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம்தான் மும்பையின் அஸல்ஃபா சேரியை வண்ணங்களால் அழகுபடுத்தியது. அதே நிறுவனம்தான்
தற்போது கர்தண்டா சேரியை கையில் எடுத்துள்ளது.

இந்தச் சேரிப்பகுதியில் உள்ள வீட்டின் சுவர்களுக்கும் கூரைகளுக்கும் வண்ணம் பூசவது மட்டுமல்ல தற்போது உள்ள கூரைகளுக்குப் பதிலாக குறைந்தளவு வெப்பத்தை உள்ளே கடத்தும் பிரத்யேக கூரைகளை வழங்குவதையும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய வகை கூரைகள் பருவமழை காலத்தில் ஸ்திரத்தன்மையுடன் இருக்கும். 300 வீடுகளுக்கு வண்ணம் பூசி கூரை மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சேரியில் உள்ள 7000 வீடுகளையும் அழகுபடுத்துவதே தங்கள் நோக்கம் என்கிறது இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம். சல் ரங் தே அமைப்பின் துணை நிறுவனர் டீடீப்யா ரெட்டி கூறும்போது, "நாங்கள் அஸல்ஃபா சேரியை அழகுபடுத்திய பின்னர் நாடு முழுவதும் இருந்து எங்களுக்குப் பல்வேறு கோரிக்கைகள் வந்தன. அப்படித்தான் கார் பகுதி குடியிருப்புவாசிகளும் எங்களை நாடினார்கள். மும்பையில் இருந்து விமானம் மேல் எழும்பியவுடன் முதலில்
பார்க்கும் பகுதியாக இந்த கார் பகுதி இருக்கிறது. எனவேதான் இந்தப் பகுதியை முதலில் அழகுபடுத்த நாங்கள் திட்டமிட்டோம்" என்றார்.

சல் தே ரங் அமைப்பின் துணை நிறுவனர் டெரன்ஸ் ஃபெரைரா கூறும்போது, "இந்தப் பகுதியை அழகுபடுத்துவதுடன் தூய்மையையும் வலியுறுத்துகிறோம். வீட்டின் சுவர்களில் துப்பாமல் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் கொட்டுமாறும் வலியுறுத்துகிறோம்" என்றார்.

தங்களது வசிப்பிடத்துக்கு ஒரு புது லுக் கிடைத்துள்ளது குறித்து விமல் மோர் என்பவர், "இப்போதெல்லாம் வெளியில் நடக்கவே ரம்மியமாக இருக்கிறது. எங்களது வீட்டுச் சுவர்களின் வண்ணம் அவ்வளவு அழகாக இருக்கிறது. இதற்காக தாமாகவே முன்வந்து பணியாற்றிய இளைஞர்கள் எம்மக்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொண்டனர்" என சிலாகித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close