[X] Close

ரயில்களில் அறிமுகமாகிறது பயணிகளுக்கு மசாஜ் சேவை


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 11:19 am
  • அ+ அ-

ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு மசாஜ் சேவையை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய ரயில்வே வாரியத்தின் ஊடகப்பிரிவு இயக்குநர் ராஜேஷ் பஜ்பாய், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ரயில்வே துறையில் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளும், யோசனைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரயில் பயணிகளுக்கு மசாஜ் சேவையை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக, இந்த மசாஜ் சேவையானது மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 20 நாட்களில் இந்த சேவை தொடங்கவுள்ளது. தலை மற்றும் பாத மசாஜ்களுக்கு தலா ரூ.100 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, ஒரு ரயிலில் 3 மசாஜ் நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கென பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலமாக ரயில்வேக்கு ஆண்டுக்கு கூடுதல்வருவாயாக ரூ.20 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற ரயில்களுக்கும் இதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராஜேஷ் பஜ்பாய் தெரிவித்தார்.- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close