[X] Close

கோவா விமான நிலைய ஓடுபாதையில் எரிபொருள் டேங்க் வெடித்துச் சிதறியது


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 11:17 am
  • அ+ அ-

கோவா விமான நிலைய ஓடுபாதையில் போர் விமானத்தின் எரிபொருள் டேங்க் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

கோவாவின் தபோலிம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தையொட்டி கடற்படைத் தளம் உள்ளது. தபோலிம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை கடற்படையும் பயன்படுத்தி வருகிறது. அந்த விமான நிலையத்தில் இருந்து கடற்படைக்குச் சொந்தமான மிக் 29 கே ரக போர் விமானம் நேற்று பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து அந்த விமானம் மேலெழும்பியபோது, எதிர்பாராதவிதமாக விமானத்தின் உபரி எரிபொருள் டேங்க் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. விமான நிலைய ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதன்காரணமாக சில மணி நேரம் தபோலிம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மாலையில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close