[X] Close

யோகா விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகங்களை கவுரவிக்க 33 விருதுகள்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு


33

  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 11:14 am
  • அ+ அ-

‘‘யோகா வழியாக ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் ஊடகங்களை கவுரவித்து விருதுகள் வழங்கப்படும்’’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.

வரும் 21-ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:யோகா மூலம் ஆரோக்கியமான வாழ்வுக்கு சிறந்த பங்காற்றும் ஊடகங்களுக்கு இந்த ஆண்டுமுதல் விருதுகள் வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. யோகாவை பல ஊடகங்கள் தனிப்பட்ட முறையில் சிறப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அவர்களைகவுரவிக்க விருதுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

யோகா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்கும் ஊடகங்களுக்கு மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படும். அவற்றில் செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகள், வானொலிகளுக்கு தலா 11 விருதுகள் வழங்கப்படும். 23 மொழிகளில் வெளிவரும் ஊடகங்களில், யோகாவுக்கு சிறப்பாக பங்களிப்பை வழங்கும் நிறுவனத்தை 6 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் தேர்வு செய்வார்கள்.

வரும் 10-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை சிறந்த முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊடகங்கள், உலக யோகா தின விருதுகளுக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்

ராஞ்சி நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார்

உடல்நலம், மனநலம் ஆகியவற்றை சிறந்த முறையில் வைத்துக் கொள்ள யோகா பயிற்சி முக்கிய பங்காற்றுகிறது. எனவே, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதியை யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று ஜூன் 21-ம் தேதி யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது. அதன்பின் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி முதல் முறையாக உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

யோகா தின நிகழ்ச்சிகள், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா விளையாட்டு மைதானத்தில் முக்கிய நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு ஆயுஷ் அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close