[X] Close

80 வயது மாமியாரை அடித்து உதைத்த மருமகள் கைது


80

  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 09:03 am
  • அ+ அ-

தனது மாமியாரை அடித்து உதைத்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ஹரியாணா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள நிவாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தா தேவி (40). இவர் தனது கணவர் மோகன் தாஸ், மாமியார் சந்த் பாய் (80) மற்றும் இரு மகன்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே, கணவரும், மகன்களும் வெளியே சென்றதும், கந்தா தேவி தனது மாமியாரை மிகவும் மோசமாக நடத்துவார் எனக் கூறப்படுகிறது. சில நேரங்களில் அவரை அடிக்கவும் செய்வார் என அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

வீடியோவால் சிக்கினார்

சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த மாமியார் சந்த் பாயை கந்தா தேவி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை, அவர்களின் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த வீடியோ சில மணிநேரங்களிலேயே வைரலாக பரவியது. அதன்பின், ‘‘இவரும் ஒரு பெண்தானே. வயதான மாமியாரை இப்படி கொடுமைப்படுத்துவது நியாயமா? அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் உத்தரவின்பேரில், நார்னல் போலீஸார் வழக்கு பதிவு செய்து கந்தா தேவியை நேற்று கைது செய்தனர். - பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close