[X] Close

அரசு பல்கலை., கல்லூரியில் சேர தேசிய அளவில் நுழைவுத் தேர்வு: கல்விக் கொள்கையில் பரிந்துரை


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 09:03 am
  • அ+ அ-

அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர தேசிய நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என வரைவு தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் (எய்ம்ஸ், ஜிப்மர் தவிர) சேர தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்படுகிறது. இதுபோல, நாட்டில் உள்ள ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளை தேசிய சோதனை முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்நிலையில், வரைவு தேசிய கல்விக் கொள்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், “நாடு முழுவதும் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் மாணவர்களை சேர்க்க தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்” என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால், என்டிஏ 2020-ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வை நடத்தும்.

அமெரிக்காவில் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் எஸ்ஏடி தேர்வுக்கு இணையானதாக இது இருக்கும். இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தனியார் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை நடத்தலாம். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close