[X] Close
 

மப்பு ஆசாமிகளை கண்டறிய மோப்ப நாய்: பிஹார் போலீஸ் புதிய முயற்சி


soon-bihar-police-will-get-dogs-trained-to-sniff-out-alcohol

  • பாரதி
  • Posted: 11 Jun, 2018 15:40 pm
  • அ+ அ-

பிஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. ஆனால், மதுவிலக்கையும் மீறி கள்ளச்சாராயம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் மதுவிலக்கை முழுவீச்சில் செயல்படுத்த கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மது அருந்திய நபர்களைக் கண்டறிய மோப்ப நாய்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சியை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி மது வாசனையை மோப்பம் பிடிக்கும் திறனுடைய நாய்களை தெலுங்கானாவில் இருந்து பெறவுள்ளனர். தெலுங்கானாவில் உள்ள புலனாய்வு ஒருங்கிணைந்த பயிற்சி அகாடமியில் நாய்களுக்கு இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே அந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 20 நாய்களை பிஹார் போலீஸார் வாங்கவுள்ளனர். 

இது குறித்து பிஹார் மாநில கூடுதல் போலீஸ் அதிகாரி வினய் குமார்"இந்த 20 நாய்களும் 8 முதல் 9 மாதங்களுக்கு தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படும். ராணுவம், துணை ராணுவத்தில் போதைப் பொருட்களை மோப்பம் பிடித்து அடையாளம் காட்ட நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், மது அருந்துவோரை இனி நாய்கள் கண்டறியும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close