[X] Close
 

நெஞ்சுவலியால் துடித்த நபரை 2 கி.மீ. முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மனிதாபிமானக் காவலர்


uttarakhand-cop-saves-mans-life-by-carrying-him-on-shoulders-2kms-uphill

  • பாரதி
  • Posted: 11 Jun, 2018 14:44 pm
  • அ+ அ-

உத்தராகண்ட் மாநிலத்தில் புனித யாத்திரைக்காக வந்திருந்த பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அவரை 2 கி.மீ தூரத்த்துக்கு மலை மீது சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அண்மையில் உத்தராகண்ட் மாநிலம் ராம்நகரில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை ஆவேசக் கும்பலிடமிருந்து காப்பாற்றிய காவலர் ககன்தீப் சிங்குக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் உத்தராகண்ட் போலீஸாருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது லோகேந்திர பகுகுணாவின் செய்கை.

லோகேந்திர பகுகுணா உதவி ஆய்வாளராக இருக்கிறார். அவருக்கு யமுனோத்திரி புனித யாத்திரை பகுதியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. லோகேந்திரா வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது புனித யாத்திரைக்கு வந்திருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஞ்சி ரஜாக் என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. திடீரென அவர் கீழே சுருண்டு விழுந்தார். 

இதைப் பார்த்த லோகேந்திரா உடனடியாக அந்த நபரை மீட்டு குதிரையில் அமர வைக்க முயன்றிருக்கிறார். ஆனால், குதிரையில் அமரும் நிலையில் ரஜாக் இல்லாததால் அவரை தனது முதுகில் சுமந்துகொண்டே 2 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

அவரது இந்த மனிதாபிமான செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்த தகவலை உத்தராகண்ட் போலீஸார் தங்களது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தனர்.

இந்த போஸ்டுக்கு லைக்குகள் குவிந்த வருவதோடு லோகேந்திராவை பலரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close