[X] Close

வடகொரிய அதிபர் போன்றவர் மம்தா பானர்ஜி: மத்திய அமைச்சர் விமசர்னம்


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 14:10 pm
  • அ+ அ-

-பிடிஐ

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அரசியல் எதிர்ப்பாளர்களை நசுக்குவதில் வடகொரியாவின் கிம் ஜோங் உன் போன்றவர் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதவியேற்றபிறகு முதன்முதலாக பிஹாரில் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது ஒரு செய்தியாளர், ''மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருக்கிறதா?'' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் தெரிவிக்கையில், ''திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க முதல்வரின் ஆட்சி முடிவடைவதற்குக் கவுன்டன் தொடங்கிவிட்டது.

அவர் தனது அரசியல் எதிர்ப்பாளர்களை நசுக்குவதற்கு முயன்று வருகிறார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது எதிர்பாளர்களை எப்படி இரக்கமற்ற முறையில் நடந்துகொள்கிறாரோ அப்படித்தான் மம்தா பானர்ஜி நடந்துவருகிறார்'' என்றார்.

தேர்தலில் வெற்றிவாய்ப்பு வியூகங்களை வகுக்கும் நிபுணராக வலம்வருபவர் பிரஷாந்த் கிஷோர்.  2014-ல் பாஜகவின் பிரமாண்ட வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோர் பங்களிப்பு முக்கியமானது.

சமீபத்திய ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பை ஏற்று அவர் வெற்றிபெறுவதற்கான தேர்தல் வியூகங்களை வகுத்துத் தந்தவர்.

பாஜகவிடம் நட்பு பாராட்டும் பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியிலும் தேசிய துணைத் தலைவராக இருப்பவர். அவரிடமிருந்து அடுத்தத் தேர்தலில் தொழில்முறை ரீதியான உதவிகளைப் பெற மம்தா பானர்ஜி முயன்றுவருவது பற்றி அமைச்சரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''அவர் யாருடைய உதவியை நாடுகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் நிச்சயமாக சொல்லமுடியும் சாதாரண பொதுமக்களிடமிருந்து அவருக்கு கிடைத்து வந்த ஆதரவு நிறுத்தப்பட்டடுவிட்டது என்று.''இவ்வாறு அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close