[X] Close

குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் பிரதமர் மோடி: எடைக்கு எடை தாமரை மலர்கள் தந்து வழிபாடு


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 10:57 am
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலுக்குச் வேட்டி அணிந்து பாரம்பரிய முறைப்படி சென்ற பிரதமர் மோடி துலாபாரமாக எடைக்கு எடை தாமரை மலர்களை வழங்கி வழிபாடு நடத்தினார்.

mo4.JPG 

modi.JPG 

பிரதமர் மோடி  நேற்று இரவு கேரள மாநிலம் கொச்சிக்கு வருகை தந்தார்.  அங்கு இரவு தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை  தனி ஹெலிகாப்டர் மூலம் குருவாயூருக்கு வந்தார். கோயில் ஓய்வறைக்கு சென்ற அவர் கோயில் சம்பிரதாயப்படி வேட்டி அணிந்தார். பின்னர் கோயிலுக்குச் சென்ற அவருடன் கேரள ஆளுநர் சதாசிவம், அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

mo1.JPG 

mo3.JPG 

கோயில் சார்பில் அவருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் கோயிலுக்கு துலாபாரமாக, எடைக்கு எடை தாமரை மலர்களை அளித்தார்.   பிரதமர் மோடி, அதை முடித்துவிட்டு, குருவாயூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close