[X] Close

நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்: ஹர்ஷ்வர்தனுடன் கேரள அமைச்சர் சந்திப்பு


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 09:53 am
  • அ+ அ-

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கொச்சியில் உள்ள கலமச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

தனி வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 314 பேருக்கும் அந்த மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அவர்கள் யாருக்கும் நிபா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இந்த சூழ்நிலையில், நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நிபா வைரஸ் அச்சுறுத்தலால் கேரளாவில் நிலவி வரும் சூழலை விவரிப்பதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்தேன். நிபா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார். இவ்வாறு சைலஜா கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close