[X] Close

பூடான் பிரதமர் லோடே ஷெரிங்குடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 09:52 am
  • அ+ அ-

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றுள்ளார். இது அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் ஆகும். பூடான் பிரதமர் லோடே ஷெரிங், வெளியுறவு அமைச்சர் தண்டி டோர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பூடான் பிரதமர் லோடே ஷெரிங்கை சந்தித்துப் பேசினேன். அப்போது அவருக்கு பிரதமர் மோடி சார்பில் வாழ்த்து தெரிவித்தேன். இருதரப்பு உறவை பலப்படுத்துவது மற்றும் நீர் மின் சக்தி துறையில் இணைந்து பணியாற்றுவது உட்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்” என பதிவிட்டுள்ளார்.- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close