[X] Close

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு: முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 09:52 am
  • அ+ அ-

கடந்த 2006-ம் ஆண்டில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் சாரதா குழுமம் தொடங்கப்பட்டது. இந்த குழுமம் சிட்பண்ட் திட்டம் மூலம் சுமார் 17 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.4,000 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2013-ல் சாரதா குழுமம் மூடப்பட்டது.

இந்த மோசடியில் மேற்குவங்கத்தை சேர்ந்த இடதுசாரி தலைவர்கள், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஆளும் திரிணமூல்காங்கிரஸை சேர்ந்த பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி வழக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

சிறப்பு விசாரணைக் குழு தலைவராக இருந்தபோது, சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களை கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. அவரிடம் விசாரணை நடத்த கடந்த பிப்ரவரியில் சிபிஐ அதிகாரிகள், வீட்டுக்குச் சென்றனர். அப்போது மாநில போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

இதன்பின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ராஜீவ் குமாரிடம் சில நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது ராஜீவ் குமார் சிஐடி துறையின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மே 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் ராஜீவ் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை. 7 நாட்கள் அவகாசம் கோரினார். இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ராஜீவ் குமாரிடம் நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close