[X] Close

அமைச்சர் அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 08:49 am
  • அ+ அ-

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். டெல்லியிலுள்ள அவரது வீட்டில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே அமித் ஷாவுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய வீட்டுக்கு இடம்பெயரவுள்ளார் அமித் ஷா. பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்த வீட்டுக்கு அவர் விரைவில் மாறவுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அங்கு அவருக்கு தேசிய பாதுகாப்புப் படையின் கறுப்புப் பூனை கமாண்டோக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவர் எனத் தெரியவந்துள்ளது.

இதனிடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அளிக்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு தொடரும் என்றும், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வரும் வரையில் அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு அளிப்பார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது ராஜ்நாத் சிங் வீட்டுக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close