[X] Close

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்.. தவறுக்கு மன்னிப்பு கோரிய திக்விஜய் சிங்


digvijaya-singh-apologises-for-tweeting-image-from-pakistan-as-madhya-pradesh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Jun, 2018 11:28 am
  • அ+ அ-

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ட்விட்டரில் தவறான படம் ஒன்றை ட்வீட் செய்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று திக்விஜய் சிங் தனது ட்விட்டர் ஒன்றில் சேதமடைந்த மேம்பாலம் ஒன்றின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதன் கீழ், "மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மேம்பாலம்தான் இது.

பாஜகவின் வளர்ச்சிப் பாதைக்கும் மக்களின் பாதுகாப்பு மீதான அக்கறையின் அடையாளம்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், வாரணாசியில் மேம்பாலம் ஒன்று இடிந்துவிழுந்ததில் 18 பேர் பலியான சம்பவத்தையும் நினைவு கூர்ந்திருந்தார்.

இந்நிலையில், போலி செய்திகளை கண்டறியும் ஆல்ட் நியூஸ் என்ற இணையதளம் ட்விட்டரில் திக்விஜய் சிங் ஷேர் செய்த படம் தவறானது என்றும். அந்தப் பாலம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருக்கிறது என்றும் தெரிவித்தது.
இதனையடுத்து திக்விஜய் சிங், தனது தவறான ட்வீட்டுக்கு மன்னிப்பு கோரினார். அல்ட்நியூஸ் செய்திக்கு பதிலளிக்கும் வகையில் திக்விஜய் சிங் தனது ட்விட்டரில், "மன்னிக்க வேண்டுகிறேன். எனது நண்பர்களுள் ஒருவர் இப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதை ஆராயாமல் பகிர்ந்தது எனது தவறுதான்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேப் புகைப்படம் ஏற்கெனவே கடந்த 2016-லும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. தெலங்கானா அரசை விமர்சிக்கும் வகையில் இந்தப் புகைப்படம் பகிரப்பட்டது. அப்போது, அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் அந்தப் புகைப்படம் தவறானது. தெலங்கானா அரசுக்கு களங்கத்தை விளைவிக்க பகிரப்பட்டு வருகிறது. புகைப்படத்தில் இருக்கும் மேம்பாலம் ராவல்பிண்டியில் இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close