[X] Close

மத்திய அமைச்சரவை செயலர் பிரதீப் குமாரின் பதவிக் காலம் நீட்டிப்பு


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 07:58 am
  • அ+ அ-

மத்திய அமைச்சரவை செயலாளர் பிரதீப் குமார் சின்ஹாவுக்கு பதவிக் காலத்தை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அமைச்சரவை செயலாளர் பிரதீப் குமார் சின்ஹாவின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழுவானது அவரது பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இவ்வாறு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்ட பிரதீப் குமார் சின்ஹாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close