[X] Close

சோனியா காந்தி, டி.ஆர்.பாலுவுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு: நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பு தர கோரிக்கை


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 14:39 pm
  • அ+ அ-

நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பு கோரி காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்  இன்று சந்தித்து பேசினர்.

கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங் களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளைக் கைப்பற்றி யது. காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

கடந்த 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்றது. இதைத்தொடர்ந்து புதிய மக்களவை 17-ம் தேதி மக்களவை கூடுகிறது. வரும் 20-ம் தேதி மாநிலங் களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் கூட்டுக் கூட் டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

மக்களவையின் தற்காலிக தலைவராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். புதி தாக தேர்ந்தெடுக்கப்பட்ட 542 உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். வரும் 19-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 4-ம் தேதி பொருளாதார ஆய் வறிக்கையும் ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஜூலை 26-ம் தேதி கூட்டத்தொடர் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் ஒத்துழைப்பை பெரும் வகையில் மத்திய அமைச்சர்கள் சோனியா காந்தியை அவரது வீட்டில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வெல், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் சென்றனர்.

அப்போது நாடாளுமன்றக் கூட்டம் சுமூகமாக நடக்க காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரையும் மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close