[X] Close

இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: ஜெய்சங்கர் கருத்து


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 10:44 am
  • அ+ அ-

கடந்த 5 ஆண்டுகளில் உலகளாவிய அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் வெளியுறவு கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் உலகளாவிய அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதை மக்களும் அங்கீகரித்துள்ளனர். அதனால்தான் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close