[X] Close

தடாசனம் செய்வது பற்றி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டார் பிரதமர் மோடி


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 10:39 am
  • அ+ அ-

சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு யோகாசனப் பயிற்சிகள் செய்ய உள்ளார்.

யோகா தினத்தின் முன்னோட்டமாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், யோகா பயிற்சி மூலம் அளவற்ற நன்மைகள் கிடைக்கும் என்றும் அதை மக்கள் வாழ்வின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். தான் திரிகோணாசனம் செய்வது போன்ற கார்டூன் வீடியோவையும் அவர் வெளியிட்டார்.

நேற்றும் யோகாசனம் பற்றி ட்விட்டரில் மோடி பதிவிட்டுள்ளார். யோகா பயிற்சியில் ஒன்றான தடாசனம் செய்வதால் மற்ற ஆசனங்களை செய்வது சுலபமாக இருக்கும் என்றும், அந்த ஆசனத்தை எப்படி செய்வது என்பதை விளக்கும் கார்டூன் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தடாசனம் செய்வதால் முதுகெலும்பில் நரம்பு தூண்டப்பட்டு உடல் சிறப்பாக செயல்படும் என்றும் மூட்டுவலி, தலைவலி, குதிகால் எலும்பு வலி போன்றவை குணமாகும் எனும் அந்தப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close