[X] Close

ஆந்திராவில் சிபிஐ மீதான தடை நீக்கம்: அதிகாரபூர்வ அரசாணை வெளியீடு


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 10:38 am
  • அ+ அ-

மாநிலங்களில் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பொது ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த பொது ஒப்புதலை முந்தைய சந்திரபாபு நாயுடு அரசு கடந்த ஆண்டு நவம்பரில் வாபஸ் பெற்றது. இதன்காரணமாக, ஆந்திராவில் சிபிஐ அதிகாரிகள் சோதனை, விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மத்திய அரசு சிபிஐ அமைப்பை தனது கைப்பாவையாக பயன்படுத்துவதால் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்தார்.

அண்மையில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய முதல்வராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து சிபிஐ மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வ அரசாணையை புதிய அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஆந்திராவில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை, விசாரணை நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close