[X] Close

பிரதமர் நரேந்திர மோடியுடன் ம.பி. முதல்வர் கமல்நாத் சந்திப்பு


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 10:22 am
  • அ+ அ-

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த மாநில முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று கடந்த 30-ம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றதற்கு மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் மத்திய பிரதேசத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கும்படி அவர் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close