[X] Close

பிரதமர் மோடி - இம்ரான் கான் சந்திப்பு இல்லை: வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 17:13 pm
  • அ+ அ-

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இருந்த தீவிரவாத முகாம்களை, குண்டுவீசி அழித்தது.

இதன் பிறகு இருநாடுகளிடையேயான உறவு இறுக்கமான நிலையில் இருந்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்றதற்கு இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சு மீண்டும் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைக்கப்படவில்லை.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைவர் பிஷ்கெக் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைக்கு மாநாட்டில் பிரமதர் மோடி ஜூன் 13, 14 தேதிகளில் பங்கேற்கிறார்.

இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின் போது, இரு தலைவர்களும் ஒரே இடத்தில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், இருவருக்கும் இடையே சந்திப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பில்லை. இதற்கான எந்த திட்டமிடலும் செய்யப்படவில்லை’’ எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close