[X] Close

கேரளாவில் 7 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு? - கண்காணிப்பில் 314 பேர்: தீவிர சிகிச்சை


7-314

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 11:12 am
  • அ+ அ-

கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மொத்தம் 7 தனித்து வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் இன்று கொச்சி சென்று ஆய்வு நடத்தவுள்ளார்.

கடந்த ஆண்டு  கோழிக்கோடு மாவட்டம், சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் லினியும் பலியானார். அதன்பின் கேரள அரசின் தீவிரமான நடவடிக்கை, மருத்துவர்களின் சிகிச்சை ஆகியவற்றால் நிபா வைரஸ் கட்டுக்குள் வந்தது.

கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலால் கோழிக்கோட்டில் 14 பேரும், மலப்புரத்தில் 3 பேரும் பலியானார்கள். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில்  நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த மாணவருடன் சேர்ந்து தங்கி இருந்த 5 பேருக்கும், சிகிச்சை அளித்த செவிலியர் உட்பட சிலருக்கு  காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால், அவர்களும் தனி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 2  பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களது ரத்த மாதிரியும் புனே சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களும் தனி வார்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கடும் காய்ச்சல் ஏற்பட்டு 314 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் யாருக்காவது நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்ற அடிப்படையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே நிபா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் பினராயி விஜயன் இன்று கேரளா செல்லவுள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்த மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவக்குழுக்கள் கொச்சி நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சிறப்பு மருத்துவக் குழுக்களும் வரவழைக்கப்படலாம் எனத் தெரிகிறது.   

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close