[X] Close

காஷ்மீர் பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்ய திட்டம்: அமித் ஷாவிடம் அறிக்கை தாக்கல்


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:41 am
  • அ+ அ-

காஷ்மீர் மாநில நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, உள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். காஷ்மீரின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அமர்நாத் யாத்திரை ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீரில் சட்டப்பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி, தொகுதிகளை மறுவரையறை செய்து மாற்றி அமைக்கவும் மக்கள் தொகை அடிப்படையில் ஜம்மு பகுதியில் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இதற்கென மறுவரையறைக் குழுவை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மறுவரையறை தொடர்பான விரிவான அறிக்கையை அமித் ஷாவிடம் அதிகாரிகள் அளித்தனர்.

ஏற்கெனவே, 2026-ம் ஆண்டு வரை காஷ்மீரில் மறுவரையறை தேவையில்லை என்று 2002-ல் அப்போதைய முதல்வர் பரூக் அப்துல்லா மாநில அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தார். ஆளுநர் மூலம் இச்சட்ட திருத்தத்தை நீக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் முயற்சிக்கு மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close