[X] Close

385 ஆலமரங்களை காப்பாற்ற முதல்வரின் மனதை மாற்றிய திம்மக்கா


385

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:39 am
  • அ+ அ-

கர்நாடகாவின் துமக்கூரு மாவட்டத்தில் பாகேபள்ளி - ஹளகுரு இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாகடி முதல் கூதூர் வரையிலான இரு வழிச் சாலையில் உள்ள சாலையோர மரங்களை வெட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சாலுமர திம்மக்கா (107) என்பவரால் கூதூர் கிராமத்தில் வளர்க்கப்பட்ட 385 ஆலமரங்களையும் வெட்ட திட்டமிடப்பட்டது. 80 ஆண்டுகளுக்கு முன் இவற்றை நட்டு வளர்த்து வந்த திம்மக்காவுக்கு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆலமரங்களை அரசு வெட்ட திட்டமிட்ட செய்தி அறிந்த திம்மக்கா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர் ஆகியோரை நேற்று சந்தித்து மனு அளித்தார். அதில், “கர்நாடகாவில் மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நான் வளர்த்த ஆலமரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக்கூடாது” என குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் குமாரசாமி மரங்களை வெட்டாமல் சாலைகளை அகலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close