[X] Close

தீவிரவாதிகள் தாக்குதலில் காஷ்மீரில் பெண் உயிரிழப்பு


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:33 am
  • அ+ அ-

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாவட்டம் புல்வாமா மாவட்டத்தில் சிங்கூ-நர்பால் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள சந்தைப் பகுதியில் நேற்று மாலை வழக்கம் போல மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 தீவிரவாதிகள், தங்களிடமிருந்த கைத்துப்பாக்கியால் மக்களை நோக்கி சுட்டனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த நிகீனா பனோ (32) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு நபர், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஸ்ரீநகரில் வன்முறை

ஸ்ரீநகரில் நேற்று ரம்ஜான் கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதையடுத்து போலீஸாரைக் கண்டித்து முகங்களை மூடியபடி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close