[X] Close

மேற்கு வங்கத்தில் திரிணமூல் தலைவர் நிர்மல் குந்து சுட்டுக் கொலை: பாஜக-திரிணமூல் பரஸ்பர குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 20:33 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில்  நிம்தா பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குந்து கடையொன்றில் நின்றுக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 

மோட்டார் சைக்கிளில் பின்புறம் சவாரி செய்தவர் நிர்மல் குந்துவை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளதாக சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

இதில் இரு குண்டுகள் அவருடைய உடலில் பாய்ந்துள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

நிர்மல் குந்துவை கொலை செய்தது பாஜகவினர் தான் என திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்ட பாஜக இதனை கடுமையாக மறுத்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close