[X] Close

மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி இல்லை; பூஜ்ஜியம் வாக்கு சதவீதம் பெற்ற 610 அரசியல் கட்சிகள்


610

  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 16:12 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

சிறிய முதல் மாநில அளவில் 610 கட்சிகள் போட்டியிட்டு ஒரு இடத்தைக் கூட வெல்லமுடியாமல் பூஜ்ஜியம் வாக்கு சதவீதத்தை மக்களவைத் தேர்தலில் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடந்தது. தேர்தல் முடிவில் 303 இடங்கள் பெற்ற பாஜக, பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வென்று இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறவில்லை.

இதில் வியக்கத்தக்க வகையில் 17-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் சிறிய மற்றும் பிராந்திய அளவில் 601 கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட இடங்களில் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை.இதில் 13 கட்சிகள் ஒரு இடத்தில் மட்டும் வென்று மக்களவைக்குள் சென்றுள்ளன.

சில முக்கியக் கட்சிகளான பார்வர்டு  பிளாக், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி), ஜனநாயக ஜனதா கட்சி(ஜேஜேபி), சிக்கிம் ஜனநாயகக் கட்சி (எஸ்டிஎப்), ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, சர்வ ஜனதா கட்சி(எஸ்ஜேபிஏ), ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, அனைத்து இந்திய என் ஆர் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), பாமா ஆகிய கட்சிகள் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை.

இந்த 610 கட்சிகளில் 80 கட்சிகள் மட்டும் தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளன. 530 கட்சிகள் எந்தவிதமான வாக்குகளையும் பெறவில்லை.

இந்த தேர்தலில் மொத்தம் 37 கட்சிகள் தங்கள் இருப்பைப் பதிவு செய்துள்ளன. அதில் பாஜக 303 இடங்கள், காங்கிரஸ் 52 இடங்கள், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, சிவசேனா , ஜக்கிய ஜனதா தளம், ஆகியவை குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பெற்றுள்ளன.

இதில் ஆம்ஆத்மி, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் ஐக்கிய கட்சி, அதிமுக, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், சிக்கிம் கிராந்த்காரி கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (நாகாலாந்து), மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக்தந்த்ரி கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரள காங்கிரஸ் (மானி), மிசோ தேசிய முன்னணி  ஆகியவை தலா ஒரு இடத்தில் மட்டும் வென்றுள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தம் 464 கட்சிகள் போட்டியிட்டதில் 38 கட்சிகள் மக்களவைக்குள் நுழைந்தன. 12 கட்சிகள் ஒரு இடத்தில் மட்டும் வென்றது.

பாஜக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள் இணைந்து 375 இடங்களில் வென்றன. கடந்த 2014-ம் ஆண்டு 342 இடங்களில் வென்றன.

கடந்த 2014-ம் ஆண்டில் 400 சிறிய கட்சிகள் எந்தவிதமான இடங்களிலும் வெல்லவில்லை. 6 ஆயிரத்து 40 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close