[X] Close
 

புத்தகப்பை சுமையை குறைக்கவும்: தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம்


cji-gets-a-letter-from-kochi-against-heavy-schoolbags

  • பாரதி
  • Posted: 09 Jun, 2018 09:27 am
  • அ+ அ-

புத்தகப்பை சுமையை குறைக்கக் கோரி கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதுவும் குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகள் அதிக புத்தக சுமையை சுமத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தனது கடிதத்தை பொதுநல மனுவாக பாவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஜூன் 6-ம் தேதி முகேஷ் ஜெயின் என்பவரிடமிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றதாக உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளாது. 
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ வாரியத்தின் கீழ் 19,000 பள்ளிகள் செயல்படுகின்றன.

கடிதத்தின் விவரம்:
2 பக்கங்கள் கடிதம் எழுதியுள்ள ஜெயின், "பிள்ளைகளின் புத்தகப்பை சுமையைக் குறைக்க பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரத் தேவையில்லை. என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்துவரச் சொன்னால் போதுமானது.
சராசரியாக 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையின் உடலில் எடை 28 கிலோ இருக்கும். ஆனால், அந்தக் குழந்தை அதன் உடல் எடையில் 20% அளவில் புத்தகச்சுமையை சுமக்க வேண்டியிருக்கிறது. 10 ஆண்டுகள் பள்ளிப் படிப்பில் ஒரு பள்ளிக் குழந்தை அதிகளவில் சுமை தூக்க வேண்டியிருக்கிறது. எனவே, புத்தகப்பையின் சுமையைக் குறைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close