[X] Close

அப்பா நான் அப்பவே சொன்னேன்.. ட்விட்டரில் பொங்கிய பிரணாபின் மகள்


told-you-says-pranab-mukherjees-daughter-on-morphed-photo-of-rss-event

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Jun, 2018 15:08 pm
  • அ+ அ-

ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் தனது தந்தை கலந்து கொள்வதற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்துவந்த பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி தற்போது இணையத்தில் உலா வரும் பிரணாபின் மார்ஃபிங் ஃபோட்டோவை சுட்டிக் காட்டி அப்பவே சொன்னேனே என ட்வீட் செய்திருக்கிறார். 

ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் கலந்து கொண்ட் பிரணாப் முகர்ஜி, "சகிப்பின்மையால் நாட்டின் பன்முகத்தன்மை பாதிப்புக்குள்ளாகும்" எனப் பேசியிருந்தார். 

ஆனால், அவர் கூட்டத்துக்கு செல்வதற்கு முன்னால் அவரது மகளும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பிரணாப் முகர்ஜி நாக்பூர் செல்வதால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தவறான கதைகளை கட்டவிழ்த்து விடும். அந்த பிரிவினைவாத அமைப்பு தங்கள் கொள்கைகளை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) ஏற்றுக் கொண்டு விட்டதாக விஷம பிரச்சாரம் செய்யும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரணாப் ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தின்போது தலையில் குல்லா அணிந்து தனது கையை நெஞ்சோடு இணைத்து உறுதிமொழி ஏற்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

இதைச் சுட்டிக்காட்டியுள்ள சர்மிஷ்டா, "இதுதான் நடந்துவிடும் என நான் பயந்தேன். என் தந்தையிடமும் இதைத்தான் எச்சரித்தேன். சில மணி நேரங்கள்கூட ஆகவில்லை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் தனது தரக்குறைவான தந்திரங்களை முழுவீச்சில் ஆரம்பித்துவிட்டன" என ட்வீட் செய்துள்ளார்.

மற்றுமொரு ட்வீட்டில், "இன்றைய சம்பவத்தின் வாயிலாக நீங்கள் பாஜகவின் தரம்தாழ்ந்த தந்திரங்களைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பேசியதை எல்லாம் மறந்துவிடுவார்கள். போலியான இந்தப் புகைப்படம் மட்டும் போலி உணர்வுகளுடம் உலா வரும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close