[X] Close

அதிகமான லக்கேஜுக்கு அபராதம்!- பரவலான எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட ரயில்வே


railways-takes-u-turn-on-baggage-penalty

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Jun, 2018 11:47 am
  • அ+ அ-

ரயிலில் செல்லும் பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக லக்கேஜைக் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பலைகள் வலுத்ததால் அதை வாபஸ் பெற்றுள்ளது இந்திய ரயில்வே.
ஜூன் 1-ம் தேதி முதல் தொடர்ச்சியாக ரயில்வே நிர்வாகம் ஒரு கண்காணிப்பை மேற்கொண்டது. அதன்படி, ஒவ்வொரு பயணியும் தன்னுடன் எடுத்துவரும் சுமையின் அளவை கண்காணித்தது. கூடுதலாக சுமையை எடுத்துவரும் பயணிக்கு அபராதம் விதிக்க முடிவு செய்தது. 

ரயில்வேயின் இந்த முடிவுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ரயில்வே பின்வாங்கியது. ரயில்வே செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் வாஜ்பாய், "அதிகமான உடைமைகளை ஒருவர் எடுத்துச் செல்வதால் அது மற்ற பயணிகளுக்கு எவ்வளவுதூரம் இடையூறை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதற்கே இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது" என்றார்.

ரயிலில் எவ்வளவு லக்கேஜ் கொண்டு செல்லலாம்..
அனுமதிக்கப்பட்ட அளவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் ஒரு பயணி 40 கிலோ வரை கட்டணம் ஏதும் செலுத்தாமல் தன்னுடன் எடுத்துச் செல்லலாம். 80 கிலோ வரை கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்ல முடியும். அதைவிட கூடுதலாக இருக்கும் உடைமைகளை லக்கேஜ் வேனில் வைக்க வேண்டும்.

ஏசி முதல் வகுப்பில் செல்லும் பயணி தன்னுடன் 70 கிலோ வரை உடைமைகளை கட்டணம் ஏதுமின்றி எடுத்துச் செல்லலாம். கட்டணம் செலுத்தில் 150 கிலோ வரை எடுத்துச் செல்லலாம்.

ஏசி இரண்டாம் வகுப்பில் செல்லும் பயணிகள் 50 கிலோ வரை உடைமைகளை இலவசமாகவும் மேலும் கூடுதலாக 50 கிலோ கட்டணம் செலுத்தியும் எடுத்துச் செல்ல வேண்டும். ஏசி மூன்றாம் வகுப்பில் செல்லும் பயணிகள் 80 கிலோ எடை வரை இலவசமாகவும் அதற்கு மேல் 40 கிலோ வரை கட்டணம் செலுத்தியும் எடுத்துச் செல்ல முடியும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close