[X] Close
 

நீட் வெற்றியின் ரகசியம் என்ன?- தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கூறும் டிப்ஸ்


bihar-girl-tops-neet-medical-entrance-test-shares-her-success-mantra

  • பாரதி
  • Posted: 05 Jun, 2018 16:09 pm
  • அ+ அ-

பாடங்களைப் படிக்கும்போது கருத்துகளை சரியாக உள்வாங்கிக் கொண்டு படித்தால் நீட், எய்ம்ஸ் என எந்த ஒரு நுழைவுத்தேர்வாக இருந்தாலும் எளிதில் வென்றுவிடலாம் என்கிறார் நீட் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா குமாரி.

நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுதியவர்களில் 3,12,399 மாணவர்கள், 4,02,162 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 7,14,562 பேர் (56 சதவீதம்) மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16.49 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டுபோலவே இந்த ஆண்டும், 56 சதவீத பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 36 மாணவர்கள், 14 மாணவிகள் இடம்பெற்றுள்ளனர். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி மொத்தம் உள்ள 720 மதிப்பெண்ணில் 691 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். . 

தனது வெற்றியின் ரகசியம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கல்பனா, "எனது சொந்த ஊர் பிஹார். நான் நீட் பயிற்சி மையத்தில் சேர்வதற்காகவே டெல்லி வந்தேன். டெல்லியில் பயிற்சி பெற்றபோது தினமும் 12 மணி நேரம் முதல் 13 மணி நேரம் வரை நீட் தேர்வுக்காக படித்தேன். 

முதலில் என்சிஇஆர்டி புத்தகங்களைத் தெளிவாகப் படித்தேன். அதேபோல் பயிற்சி மையத்தில் கொடுக்கப்பட்ட புத்தகங்களை கவனமாகப் படித்தேன். படிக்கும்போது பாடங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை சரியாக உள்வாங்கிக் கொள்வேன். கருத்துகளை சரியாக உள்வாங்கிக் கொண்டு படித்தால் நீட், எய்ம்ஸ் என எந்த ஒரு நுழைவுத்தேர்வாக இருந்தாலும் எளிதில் வென்றுவிடலாம். 

அதேபோல் அடிக்கடி மாதிரித் தேர்வுகளை எடுத்துக் கொள்வேன். தேர்வுகளை எதிர்கொள்ளும்போது நம் தவற்றைத் திருத்திக் கொள்ள முடிகிறது. எய்ம்ஸில் படிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் அதனால் எய்ம்ஸ் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close