[X] Close
 

குப்பையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு பாலூட்டி உயிர் தந்த போலீஸ் அன்னை


little-kumaraswamy-the-government-s-bab

  • பாரதி
  • Posted: 05 Jun, 2018 15:29 pm
  • அ+ அ-

கர்நாடகாவின் புதிய முதல்வர் குமாரசாமி என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், லிட்டில் குமாரசாமி என்றால் யார் எனத் தெரியுமா உங்களுக்கு? பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் ஒரு குப்பைத்தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளங் குழந்தைக்குதான் குமாரசாமி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குப்பையில் இருந்து மீட்கப்பட்ட அந்த பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதற்கு மறு ஜென்மம் அளித்திருக்கிறார் போலீஸ் கான்ஸ்டபிள் அர்ச்சனா.

எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசப்பட்டிருந்த பச்சிளங் குழந்தையைப் பார்த்திருக்கிறார். உடனே அருகிலிருந்த கடைக்காரருக்கு தகவல் தெரிவிக்க அந்தக் கடைக்காரர் போலீஸில் புகார் கூறியிருக்கிறார். உடனடியாக அங்கு விரைந்துவந்த கூடுதல் சப் இன்ஸ்பெக்டர் நாகேஷ் குழந்தையை பத்திரமாக மீட்டுச் சென்றுள்ளார். 

இது குறித்து நாகேஷ் கூறும்போது, "நான் அந்த ஆண் குழந்தையை மீட்கும்போது குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. தொப்புள்கொடி கழுத்தை சுற்றிக் கொண்டிருந்தது. உடனே மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தோம். அங்கு குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டி குளிக்க வைத்துக் கொடுத்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றோம்.

அங்கு அர்ச்சனா என்ற கான்ஸ்டபிள் குழந்தைக்கு பாலூட்டினார். அர்ச்சனா மூன்று மாத குழந்தையின் தாய். பாலைக் குடித்தவுடன் குழந்தை சத்தமாக அழுதது. குழந்தை மீண்டபோதுதான் எங்களுக்கு நிம்மதி வந்தது. அருகிலிருந்த கடையில் குழந்தைக்கு ஒரு உடுப்பு வாங்கி உடுத்தினோம். இப்போது அந்தக் குழந்தை இந்த அரசாங்கத்தின் குழந்தை. இனிமேல் குழந்தையை இந்த அரசாங்கம்தான் பாதுகாக்கும் என்பதால் குழந்தைக்கு முதல்வரின் பெயரை வைத்திருக்கிறோம்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close