[X] Close

அத்தனையையும் பிரச்சினையாக்கும் மனிதன்; அதற்கு சிறந்த உதாரணம் பிளாஸ்டிக்: ஜக்கி வாசுதேவ்


plastic-a-classic-case-of-us-turning-everything-into-problem-sadhguru

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jun, 2018 12:18 pm
  • அ+ அ-

உலக சுற்றுச்சூழல் நாள் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘பிளாஸ்டிக்கை தோற்கடிப்போம், தூக்கி எறிவோம்’, என்ற கருத்தை முன்நிறுத்தி உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ், "அத்தனையையும் பிரச்சினையாக்குவது மனிதனின் இயல்பு; அதற்கு பிளாஸ்டிக் ஒரு சிறந்த உதாரணம்" எனக் கூறியிருக்கிறார்.

அவர் பேசியதாவது:
மனிதர்களாகிய நம்மிடம் எதைக் கொடுத்தாலும் அதைப் பிரச்சினையாக்குவது நம் இயல்பு. அந்த இயல்புக்கு சிறந்த உதாரணம் பிளாஸ்டிக். ஒரு பொருளை 1000 ஆண்டுகள்கூட மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும் என்பது ஒரு வரப்பிரசாதம். ஆனால், அந்த வரத்தை நாம் சாபமாக்கி வைத்திருக்கிறோம். பிளாஸ்டிக் இன்று நம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் ஊடுருவியிருக்கிறது.

நாம் பயன்படுத்தும் குழாய் தண்ணீரில் 94% பிளாஸ்டிக் இருக்கிறது என்றும் பாட்டில் தண்ணீரில் 67% பிளாஸ்டிக் துகள் இருக்கிறது என்றும் அமெரிக்க மக்கள் கூறுகின்றனர். நாம் நச்சை நம்முள் கடத்திக் கொண்டிருக்கிறோம். இதனை வெறும் சட்டங்களால் மட்டும் தடுத்துவிட முடியாது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வசதிகளையும் சவுகரியங்களையும் அனுபவிக்க விரும்பும் நாம் சற்று பொறுப்புணர்வுடன் சூழலை அணுக வேண்டும்.
பிளாஸ்டிக்குக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் இருந்தாலும்கூட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒவ்வொரு குடிமகனும் விழிப்புணர்வு பெற வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவாக இருக்கட்டும் காற்று மாசு நீர்நிலைகள் மாசு என எதுவாக இருந்தாலும் அது வாழ்வாதாரத்துக்கு எதிரான வன்முறை. ஏன் நாம் வாழும் கிரகத்துக்கு எதிரான வன்முறை" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close