[X] Close

டான்ஸிங் அங்கிளைப் பாராட்டித் தள்ளிய நடிகர் கோவிந்தா


for-dancing-uncle-a-message-from-govinda-i-love-his-moves

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jun, 2018 13:19 pm
  • அ+ அ-

சமூகவலைதளங்களின் சென்சேஷனான 'டான்ஸிங் அங்கிள்' என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மாநில கல்லூரிப் பேராசிரியருக்கு நடிகர் கோவிந்தா தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, கல்லூரி பேராசிரியரான ஸ்ரீவஸ்தவா இவர் இந்தி நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகர். எந்தத் திருமண வீட்டுக்குச் சென்றாலும், குறைந்தபட்சம் ஒரு கோவிந்தா பாடலுக்காவது நடனமாடி விட்டுத்தான் வருவார். கோவிந்தா திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலுக்கான நடனத்தையும் அதேபோன்று ஸ்ரீவஸ்தவா ஆடுவார்.

அந்தவகையில் அண்மையில் அவர் ஆடிய நடனம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. அவரது நடனத்தைப் பார்த்து நெட்டிசன்கள் பாராட்டுக்களைக் குவித்தனர். அனுஷ்கா சர்மா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்கள் பாராட்டுகளைப் பதிவு செய்தனர்.

மக்கள் வெறும் பாராட்டுக்களைத் தெரிவிக்க மத்தியப் பிரதேச அரசோ, ஸ்ரீவஸ்தவா சார்ந்துள்ள விதிஷா நகராட்சியின் கவுரவத் தூதுவராக அவரை நியமித்து அந்தமாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சியின் நற்பெயரை மக்களின் மத்தியில் கொண்டு செல்வதற்காக ஸ்ரீவஸ்தவாவுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் கோவிந்தா, லண்டனில் இருந்து வெளிவரும் மிட்டே என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "பிரமிக்கவைக்கும் நடனம். சஞ்சீவிஜியின் நடனத்தில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது. இதுதான் நடனத்துக்கான திறவுகோள். அவரது மனத்துள்ளல் அவரது நடனத்தில் பிரதிபலிக்கிறது.  இதுபோன்ற ரசிகர்களின் துதிகள்தான் எனது பணியின் சிறந்த தருணம். இவற்றை விருதுபோல் நான் பாதுகாத்துப் போற்றுவேன்" எனக் கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close