[X] Close

மாணவர்களை ஹிங்ஹிலிஷில் தேர்வெழுத அனுமதித்த ம.பி., பல்கலைக்கழகம்


in-a-first-mp-medical-university-allows-students-to-write-exams-in-hinglish

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Jun, 2018 15:17 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேச பல்கலைக்கழகம் ஒன்று தனது மாணவர்களை ஹிங்கிலிஷில் தேர்வை எதிர்கொள்ள அனுமதி அளித்திருக்கிறது.

இங்கிலிஷ் என்றால் ஆங்கிலம் அது என்ன ஹிங்கிலிஷ் என்கிறீர்களா? ஹிந்தியும் இங்கிலிஷும் இணைந்தால் அதுதான் ஹிங்கிலிஷ். மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்தான் இப்படி மாணவர்கள் ஹிந்தியையும் ஆங்கிலத்தையும் இணைத்து ஹிங்கிலிஷில் தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளது.

இது குறித்த சுற்றறிக்கை கடந்த மே 26-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர், கல்வி வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறது. அதன்படி மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் தேர்வில் விடையளிக்கும்போது ஹிங்கிலிஷிலும் விடையளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு மாணவர்களும் கல்வியாளர்களும் வரவேற்பு அளித்திருப்பதாகக் கூறுகிறார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா. கிராமப்புரங்களில் இருந்து மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு இந்த சலுகை மிகவும் உதவிகரமாக இருக்கும் என அவர் கூறியிருக்கிறார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தி மீடியத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக்கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கல்லூரித் தேர்வுகளில் தோல்வி அடைவது குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். அவர்கள் பாடத்தைப் புரிந்து கொள்ளும் திறமை இல்லாததால் தோல்வியடையவில்லை ஆங்கிலத்தில் பதில் எழுதத் தெரியாததாலேயே தோல்வியடைகின்றனர் என்பதை நாங்கள் பின்னர்தான் புரிந்து கொண்டோம். எனவேதான் இந்தி மீடியத்தில் படித்த கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஹிங்கிலிஷில் தேர்வை எதிர்கொள்ள அனுமதித்திருக்கிறோம்" எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close