[X] Close

மகாபாரத காலத்திலேயே நேரலை இருந்தது; நாரத முனிதான் அக்கால கூகுள்.. இன்னும் இருக்கு படியுங்கள்


journalism-started-during-mahabharata

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 May, 2018 15:43 pm
  • அ+ அ-

செயற்கைக்கோள் எல்லாம் மகாபாரத காலத்திலேயே இருந்தது. இணையச் சேவையும் இருந்தது என்று சர்ச்சையைக் கிளப்பியவர் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப். அவரது பேச்சுக்கள் அவ்வப்போது பாஜகவை சங்கடத்தில் ஆழ்த்திவிடும்.
அதே பாணியில் தற்போது பேசியுள்ளார் உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா.

இந்தி இதழியல் தினத்தை ஒட்டி நடந்த விழாவில் அவர் "இதழியல் மகாபாரத காலத்திலேயே இருந்தது. திரிதிராஷ்டரரின் தேரோட்டி சஞ்சய் குருஷேத்தரத்தில் நடந்த பாரதப் போர் பற்றிய கழுகுப் பார்வை அறிக்கையை ஹஸ்தினாப்பூரில்
இருந்துகொண்டே வழங்கினார். அது நேரலை இல்லை என்றால் எதை நாம் நேரலை என்று கூற முடியும்" எனப் பேசினார்.
இதையேத்தான் பிப்லப் குமார் தேபும் கூறினார். அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் இல்லையென்றால் சஞ்சய்யின் கண்கள் வாயிலாக திரிதிராஷ்டிரர் பாரதப் போரை எப்படிக் கண்டிருப்பார் என்றார்.

உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா ஒருபடி மேலே சென்று நாரத முனி தான் அக்கால கூகுள் எனக் கூறினார். "உங்கள் கூகுள் இப்போதுதான் வந்தது. எங்கள் கூகுள் பழம்பெருமை கொண்டது. நாரத முனிதான் தகவல் சுரங்கம். அவர் எங்கு வேண்டுமானாலும் செல்வார் எந்தத் தகவலை வேண்டுமானால் சேர்ப்பார். மூன்று முறை நாராயணா சொன்னால் போது தகவல் சென்றடைந்துவிடும்" என்றார்.

இதற்கு முன்னர் குஜராத் முதல்வர் விஜத் ரூபாணி ஒருமுறை பேசும்போது நாரத முனியை கூகுளுடன் ஒப்பிட்டுப் பேசினார். பாரதப் போரின்போது பலராமனுக்கு கிருஷ்ணர் குறித்த தகவல்களைக் கொண்டு சேர்த்தது நாரத முனி என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் சத்யபால் சிங், ஐஸக் நியூட்டனுக்கு முன்னதாகவே மோஷன் விதிகள் மந்திரங்கள் வாயிலாக சொல்லப்பட்டுவிட்டன என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close