[X] Close
 

ரூ.589 கோடி: 2016-17-ல் தேசிய கட்சிகள் நன்கொடையாக பெற்றத் தொகைதான் இது


7-parties-got-rs-589-crore-in-donation

  • பாரதி
  • Posted: 31 May, 2018 10:35 am
  • அ+ அ-

2016-17 காலகட்டத்தில் தேசியக் கட்சிகள் நன்கொடையாக பெற்றத் தொகை ரூ.589 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பாஜக மட்டும் ரூ.532.27 கோடி பெற்றுள்ளது.

அதுவும் 1194 பேரிடம் மட்டும் இருந்தே இவ்வளவு பெரியத் தொகை வசூலாகியுள்ளது. இவையெல்லாமே ஒவ்வொரு நபரும் தலா ரூ.20,000க்கு மேல் அளித்த நன்கொடை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பாஜக பெற்றுள்ள நன்கொடை மற்ற கட்சிகள் அனைத்தும் பெற்ற மொதத் தொகையைவிட 9 மடங்கு அதிகம். 

எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை:

பாஜக  - ரூ.532.27 கோடி
காங்கிரஸ் - ரூ.41.0 கோடி
பகுஜன் சமாஜ் கட்சி - ரூ.20,000க்கு மேல் 2016- 17 ஆண்டில் எந்த ஒரு நன்கொடையும் பெறவில்லை
தேசிய மாநாட்டுக் கட்சி - ரூ.6.3 கோடி

இந்தப் புள்ளி விவரங்களின்படி 2016-17 காலகட்டத்தில் தேசியக் கட்சிகள் பெற்றுள்ள நன்கொடை அதிகரித்துள்ளது. 2015-16-ல் ரூ.102.02 கோடியாக இருந்த நன்கொடை வசூல் 2016-17-ல் ரூ.532.27 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் 2016-17-ல் தேசியக் கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.1559.17 கோடியாகும்.

கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close