[X] Close
 

கேல்குலேட்டர் தெரியும் டவுரி கேல்குலேட்டர் தெரியுமா?


maneka-gandhi-seeks-action-against

  • பாரதி
  • Posted: 31 May, 2018 09:36 am
  • அ+ அ-

வரதட்சனை பெறுவதும் கொடுப்பதும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். ஆனால், ஒருவரின் கல்வித் தகுதி, சாதி, சம்பளம், தோற்றம் இவற்றின் அடிப்படையில் ஒரு ஆண்மகன் எவ்வளவு வரதட்சனை பெறலாம் எனக் கணக்கிட ஒரு கேல்குலேட்டர் ஆன்லைனில் உலா வருகிறது.

http://www.dowrycalculator.com/ என்ற இணையதளம் சமூக வலைதளங்களில் வைரலாகவே இது குறித்த தகவலை அறிந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஆவேசமடைந்ததோடு உடனடியாக அந்த இணையத்தை முடக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்.

இது தொடர்பாக மேனகா காந்தி தனது அமைச்சரவை சகா ரவ்சங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "வரதட்சனையை ஊக்குவிக்கும் விதமாக இயங்கும் http://www.dowrycalculator.com/ என்ற இணையதளத்தை உடனடியாக முடக்குவதோடு அதை உருவாக்கியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வரதட்சனைத் தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறது?
வரதட்சணை கேட்பது, வரதட்சணை எடுத்துக் கொள்வது மற்றும் வரதட்சணை கொடுப்பது அல்லது இரண்டும் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் விவகாரம் நடத்துவது வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். 

நேரடியாகவோ அல்லது மறைமுகமாக வரதட்சணை கேட்பது உறுதி செய்யப்பட்டால், குறைந்தபட்சம் 6 மாதமும், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்கும். வரதட்சணை கொடுப்பது அல்லது கேட்பது உறுதி செய்யப்பட்டால், அத்தகைய நபருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதம், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வரதட்சணை வாங்கினால் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் வரதட்சணையாக கேட்கும் பணம் அல்லது பொருளின் மதிப்பு ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகம் இருக்கும் பட்சத்தில் தண்டனை மற்றும் அபராதமும் கூடுதலாகும்.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close