[X] Close
 

புனேவைக் கலக்கும் தந்தூரி டீ: சமூகவலைதளங்களில் பரவும் மணம்


have-you-heard-of-tandoori-chai-it-s-gone-viral

  • பாரதி
  • Posted: 30 May, 2018 13:41 pm
  • அ+ அ-

அட நமக்குத் தெரிந்தது எல்லாம் தந்தூரி சிக்கன் தான். ஆனால், புனேவாசிகள் மத்தியில் தற்போது பிரபலமாக இருப்பது என்னவோ தந்தூரி டீ. சமூக வலைதளங்களில் எல்லாம் இந்த தந்தூரி டீயின் மணம்தான் பரவிக் கொண்டிருக்கிறது. ஆம், புகை மனத்துடன் திடமாக இருக்கும் இந்த டீ குறித்து ஃபேஸ்புக்கில் ட்விட்டரிலும் கருத்துகள் சுடச்சுட வந்து கொண்டிருக்கின்றன.

பிரமோத் பங்கர், அமோல் ராஜ்தியோ இவர்கள்தான் இந்த தந்தூரி டீயின் பின்னணியில் இருப்பவர்கள். இருவரும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "எங்கள் பாட்டி தந்தூர் அடுப்பில் பால் காய்ச்சுவார். அங்கிருந்துதான் எங்களுக்கு தந்தூரி டீக்கான யோசனை கிடைத்தது. 

ஏற்கெனவே சூடேற்றப்பட்ட தந்தூர் அடுப்புகளில் மண் குவளைகளை வைத்து சூடாக்குவோம். பின்னர் அதில் ஓரளவு கொதிக்கவிடப்பட்ட டீயை ஊற்றி நிரப்புவோம். டீயை அதில் ஊற்றியவுடன் டீ மேலும் கொதித்து நுரை ததும்பும். சூடான அந்த களிமண் பாத்திரம் தேநீருக்கு ஒருவித புகை வாசனையைச் சேர்க்கும். அவ்வளவுதான் தந்தூரி டீ ரெடி" என்றனர்.

தந்தூரி டீக்கு புனேவில் கிடைத்த வரவேற்பு தேசம் முழுவதும் கிடைக்கிறதா?  கப் டீக்களுக்கு மாற்றாக தந்தூரி டீ வருமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஒரு கப் தந்தூரி டீ நிச்சயம் குடித்துப் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close