[X] Close

கேதார்நாத்தில் பிரதமர் மோடி; சோம்நாத்தில் அமித் ஷா வழிபாடு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 12:24 pm
  • அ+ அ-

பிரதமர் மோடி இன்று கேதார்நாத் சென்றுள்ள நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா சோம்நாத் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. நாளை 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. 7-ம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாகவே பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஒட்டுமொத்தமாக  நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இமயமலையில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் தரிசனம் செய்ய திட்டமிட்டார்.

keda1.JPG 

அதன்படி அவர் இன்று கேதார்நாத் சென்று வழிபாடு நடத்தினார். இன்று அங்கு தங்கும் பிரதமர் மோடி நாளை பத்ரிநாத் செல்கிறார்.

இதேபோன்று மக்களவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் செய்த பாஜக தலைவர் அமித்ஷாவும் இன்று சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு சென்றார். அங்கு சிவனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close