[X] Close

கவலை வேண்டாம் மோடி; மே 23-க்குப் பின் பார்த்துக் கொள்ளலாம்: சித்தராமையா கிண்டல்


23

  • kamadenu
  • Posted: 18 May, 2019 11:47 am
  • அ+ அ-

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேச முடியவில்லை என்ற கவலை வேண்டாம்; மே 23-க்குப் பின்னர் கற்றுக் கொள்ளலாம் என பிரதமர் மோடியை கிண்டலடித்துள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஆனால், பிரதமரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது எனவே உங்கள் கேள்விகளுக்கு அவரே பதிலளிப்பார் எனக் கூறிவிட்டு அமைதி காத்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். நெட்டிசன்களும் ட்ரோல் செய்தனர். இந்த நிமிடம்வரையிலும் மீம்கள் குவிந்து வருகின்றன.

பிரதமரை விமர்சிப்போர் வரிசையில் இணைந்துள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்மோகன் சிங் அவர்களுக்கு என்ன பேச வேண்டும் என்றும் தெரியும். எதைப் பேசக் கூடாது என்றும் தெரியும். ஆனால், நமது 56 இன்ச் (மோடியின் மார்பளவு) நரேந்திரமோடிக்கு எதை பேசக்கூடாது என்பது மட்டுமே தெரியும்.

மோடி பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றால் செய்தியாளர்கள் மட்டுமே பேசுவார்கள் என்று குழம்பியிருக்கிறார். கவலை வேண்டாம். மே 23-க்குப் பின்னர் இதைப் பற்றி அறிந்து கொள்ள அவருக்கு நிறைய நேரம் இருக்கும்" என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close