[X] Close

மொபைல் சிம் கார்டு விற்பனை திட்டமில்லை: பதஞ்சலி மறுப்பு


patanjali-is-not-launching-a-swadeshi-sim-with-bsnl

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 May, 2018 17:20 pm
  • அ+ அ-

மொபைல் சிம் கார்டு விற்பனை செய்யும் திட்டமில்லை என பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டு விற்பனை செய்வதாக நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி பல்வேறு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பதஞ்சலி பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பதஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் தொலைதொடர்பு துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. அது பதஞ்சலி ஊழியர்களுக்கு இடையே குறைந்த கட்டணத்தில் அழைப்புகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம். ஆனால், பதஞ்சலி சிம் கார்டு விற்பனையில் இறங்குவதாக செய்திகள் உலா வருகின்றன. மொபைல் சிம் கார்டு விற்பனை செய்யும் திட்டமில்லை.

உள்நாட்டுத் தயாரிப்புகளையே நுகர்வதை ஊக்கப்படுத்துவம் விதமாக பிஎஸ்என்எல்-லுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close