[X] Close

கேதார்நாத்தில் பிரதமர் மோடி: தேர்தல் பிரச்சாரத்துக்கு  பிறகு வழிபாடு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 10:28 am
  • அ+ அ-

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் முடிந்ததை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்றார்.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. நாளை 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. 7-ம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாகவே பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஒட்டுமொத்தமாக  நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இமயமலையில் உள்ள பிரசித்தி பெறற கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் தரிசனம் செய்கிறார்.

kedarnath.JPG 

 

keda1.JPG 

இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் உத்தரகண்ட் மாநிலம் ஜோலிகிராண்ட் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் வந்து சேர்ந்தார். அங்கு தரிசனம் செய்யும் அவர் பின்னர் பத்ரிநாத் புறப்பட்டுச் செல்கிறார்.

kedar.JPG 

பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கேதார்நாத்தில் இன்று தங்கும் அவர் நாளை இங்கிருந்து பத்ரிநாத் புறப்பட்டுச் செல்கிறார். நாளை மாலை அவர் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், இமயமலையில் புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

ked1.JPG 

குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கேதார்நாத் கோயில் நடை அண்மையில் திறக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close