[X] Close

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி


2

  • kamadenu
  • Posted: 18 May, 2019 10:13 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை  ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் உள்ள பன்கம் எனும் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தின் 130 சிஆர்பிஎப் பட்டாலியன்பிரிவு, சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து இன்று அதிகாலை 2 மணிஅளவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது , பாதுகாப்புப் படையினரைக் கண்டதும், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இரு தரப்பிலும் நீண்ட நேரம் நடத்த துப்பாக்கிச் சண்டை முடிவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

kash.jpg 

தீவிராவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன, இவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு புல்வாமாவில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 90-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close